உசிலம்பட்டி, செப். 7: உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் எம்.பி மற்றும் எம்எல்ஏ பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது 45ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் எம்.பி.பழனி, எஸ்.வி.எஸ்.முருகன், அஜித் பாண்டி, முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், தவசி, நீதிபதி, நகர செயலாளர் பூமாராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமமுக சார்பில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தனார். இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் (ஓபிஎஸ் அணி), அமமுக மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மாநில மாணவியர் அணி செயலாளர் ஜீவித நாச்சியார், நகர செயலாளர் மார்க்கெட் பிச்சை, ஒன்றிய செயலாளர் முருகன், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஓட்டுநர் அணி பிரபு, அம்மா பேரவை கார்த்திகைசாமி, ஒன்றிய செயலாளர்கள் சசி, ஜான்சன் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.பாரதிய பார்வர்ட் ப்ளாக் கட்சி சார்பில் நிறுவனர் முருகன்ஜி தலைமையிலும், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் சார்பில் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமையிலும், தமிழ்தேசிய பார்வர்ட் ப்ளாக் கட்சி சார்பில் நிறுவனர் வழக்கறிஞர் சங்கிலி தலைமையிலும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி சார்பில் கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
The post உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு நாள்: அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர் appeared first on Dinakaran.