கறம்பக்குடி அருகே சிறுவர்கள் தயாரித்த களி மண் விநாயகர்

 

கறம்பக்குடி,செப்.13: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தில் குளத்துகரை அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்த 20க்கு மேற்பட்ட சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரை போற்றும் வகையில் புதிதாக இந்த வருடம் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து களி மண்ணால் விநாயகர் தயாரித்தனர்.

அதற்கு 4 நாட்கள் தினம் தோறும் பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறுவர்கள் செய்ததால், இதற்கு விளையாட்டு விநாயகர் என்று பெயர் வைத்தனர். தினமும் வழிபட்டு வந்தனர். பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று அம்புக்கோவில் இளமாகுளம் குளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர்.

The post கறம்பக்குடி அருகே சிறுவர்கள் தயாரித்த களி மண் விநாயகர் appeared first on Dinakaran.

Related Stories: