நாகை மாவட்ட மீனவ இளைஞர்கள் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்

 

நாகப்பட்டினம்,செப்.14: நாகப்பட்டினம் மாவட்ட மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு நாகப்பட்டினத்தில் வரும் 23ம் தேர்வு நடைபெறவுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட மீனவ இளைஞர்கள் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படையில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 ஆண்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வு வரும் 23ம் தேதி நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

18 வயது முதல் 50 வயது வரை உள்ள நற்குணம் மற்றும் நல்ல உடற் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவ இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். தேர்வின்போது கல்வி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நாகை மாவட்ட மீனவ இளைஞர்கள் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: