கறம்பக்குடியில் அனைத்து கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி

 

கறம்பக்குடி,செ.14: கறம்பக்குடியில் அனைத்து கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே சீதாராம் யெச்சூரியின் மறைவையொட்டி அணைத்து கட்சி சார்பாக நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிழ்ச்சிக்கு அக்காட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கவி வர்மன் கலந்து கொண்டு தலைமை வகித்தார்.

அனைத்து கட்சி சார்பாக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பாக நகர தலைவர் ரெங்கநாதன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய செயலாளர் சேசுராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சந்திரபாண்டியன், மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக அதன் மாவட்ட செயலாளர் முகமது ஜான் மற்றும் அனைத்து கட்சியினர், பொது மக்கள் கலந்து கொண்டு சீதாராம் யெச்சூரியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post கறம்பக்குடியில் அனைத்து கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: