கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை செயல்பாடுகள் தீவிரம்

 

கும்பகோணம், செப்.14: கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை செயல்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கும்பகோணம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம் தலைமை அஞ்சலகம் மற்றும் மேலக்காவேரி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆதார் சேவையானது பொதுமக்களின் நலன் கருதி ஞாயிறுதோறும் செயல்படும். இச்சவையில் புதிய ஆதார் அட்டை பெயர் திருத்தம், முகவரி திருத்தம் போன்ற ஆதார் சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் அனைவரும் இந்த சேவைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை செயல்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: