அரியலூர் அண்ணாசிலை அருகே பென்சனர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், செப். 14: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செப்.19 ம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை முன்னிட்டு, நடைபெற்ற மக்கள் விளக்க சந்திப்பு ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்றவர்களுக்கு பண பலன்கள் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

பிடிமானம் செய்த பணத்தை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அட்டை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் அரியலூர் கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் சாமிதுரை முன்னிலை வகித்தார். மாநில பேரவைத் தலைவர் மருதமுத்து, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

The post அரியலூர் அண்ணாசிலை அருகே பென்சனர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: