தஞ்சாவூர் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி மட்டும் நடக்கும்

 

கும்பகோணம், செப். 14: கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (14ம் தேதி) புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணிகள் மட்டும் மேற்கொள்ள இருப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளருமான கோகிலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பொதுமக்களின் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அதிகாரியின் அறிவுரையின் படி பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (14ம் தேதி) புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணிகள் மட்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

The post தஞ்சாவூர் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி மட்டும் நடக்கும் appeared first on Dinakaran.

Related Stories: