நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி

 

திருச்சி. செப்.14: திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெல்லில் நவீன ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் நிலையப் பயிற்சி செப்.23 அன்று சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்.18 நடைபெற இருந்த இப்பயிற்சி நிர்வாக காரணங்களுக்காக செப்.23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் நெல்லில் சம்பா பருவத்துக்கு ஏற்ற நவீன ரகங்கள், அதன் சிறப்பியல்புகள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மண் பரிசோதனை, விதை நேர்த்தி, ஊட்டச்சத்து மேலாண்மை, சம்பா நெல்லில் பதரைக் கட்டுப்படுத்த நெல் ப்ளூம் பூஸ்டர், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, விதை உற்பத்தி மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் போன்ற தலைப்பின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கலந்து கொண்டு பயனடையலாம். பங்கு பெற விரும்பும் விவசாயிகள் 04312962854, 9171717832, 9942449786 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: