ஆவுடையார்கோவில் அருகே விளாங்காட்டூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 

அறந்தாங்கி, செப்.14: ஆவுடையார்கோவில் அருகே விளாங்காட்டூர் கிராமத்தில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கரூர் ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுபடி கடந்த மாதம் 22ம்தேதி நில அளவை செய்யப்பட்டது. பின்பு படிவம் 7 சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த 14ம்தேதி விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்டின்லூதர் கிங் தலைமையில் ஆக்கிரமிப்பு அனைத்தும் பொக்லேன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. ஆக்கிரமைப்பு அகற்றிய போது வட்ட சார் ஆய்வாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்பேத்தி சரக வருவாய் ஆய்வாளர், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர், காவதுகுடி கிராம நிர்வாக அலுவலர், கரூர் காவல்துறையினர் மற்றும் பொன்பேத்தி சரக கிராம உதவியாளர்கள் இருந்தனர்.

The post ஆவுடையார்கோவில் அருகே விளாங்காட்டூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: