ஜெயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

ஜெயங்கொண்டம், செப். 14: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணுவை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சை கண்டித்து அமுதழகு மாற்றுத்திறனாளி சங்கத்தின் தோழமை சங்கமான அரியலூர் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் பீட்டர் பால் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர் செல்வராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், நிர்வாகிகள் செல்வ பாண்டியன், உளவேந்திரன், சுதாகர் சின்னப்பன் பாத்திமா அம்பிகா ஜாக்குலின் ஜெயலட்சுமி உட்பட மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

The post ஜெயங்கொண்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: