அருப்புக்கோட்டை, செப். 7: மதுரையில் பிரமாண்ட சாந்தாஸ் சில்க்ஸ் பட்டு மாளிகை திறப்பு விழா இன்று (செப். 7) சிறப்பாக நடைபெற உள்ளது. மதுரை ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுமத்தில் இருந்து சாந்தாஸ் சில்க்ஸ் என்ற புதிய பட்டு மாளிகை திறப்பு விழா இன்று (செப். 7) மதுரை கே.கே.நகர் 80அடி ரோட்டில் நடக்கிறது. விழாவிற்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை வகிக்கின்றனர். முன்னாள் அமைச்சரான எம்எல்ஏ கோவில்பட்டி கடம்பூர் ராஜூ, எம்எல்ஏ கோ.தளபதி, ஜெயவிலாஸ் மில்ஸ் மேலாளர் கோபால் தினகரன், தூத்துக்குடி அழகர் ஜூவல்லர்ஸ், அழகர் குரூப் ஆப் கம்பெனிஸ் சேர்மன் ஜெயராமன், விருதுநகர் திருவேங்கடம் மருத்துவமனை சுப்பாராஜ், ஜெயவிலாஸ் டிஆர்எஸ் விஜயராம் என்ற சின்னத்துரை, ஆர்.பி.பி.பெயிண்ட்ஸ் ஆர்.பி. பாலகிருஷ்ணன், டி.எச்.சி. பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் பைனான்சியல் ஆபிஸர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஜெயவிலாஸ் டி.ஆர்.வரதராஜன் புதிய பட்டு மாளிகையை திறந்து வைக்கிறார். ஆதிலட்சுமி ராமச்சந்திரன், தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மணிமேகலை அரசு, கேஜிஎஸ் ஸ்கேன் கவிதா சீனிவாசன், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், திருநகர் சரளா கோவிந்தராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றுகின்றனர். முதல் பட்டு விற்பனையை ஜெயவிலாஸ் டிஆர்எஸ்.பாபு, டிஆர்எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைக்க மதுரை நந்தினி நர்சிங் ஹோம் டாக்டர் சுஜாதா பெற்றுக்கொள்கிறார். இந்த பிரம்மாண்டமான சாந்தாஸ் சில்க்ஸ் பட்டு மாளிகை திறப்பு விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சாந்தாஸ் சில்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கேவிகேஆர்.பிரபாகரன், கேவிகேஆர்.தனசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
The post சாந்தாஸ் சில்க்ஸ் பட்டு மாளிகை திறப்பு விழா: மதுரையில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.