இந்நிலையில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் இசக்கி துரை 13ம் தேதி இரவு 8.30 மணிக்குத்தான் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர் உள்ளே புகுந்து ஒரு நாள் கழித்து தான் அவர் புகார் அளித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா வசித்து வரும் வீடு இதற்கு முன்பு அவர் அமமுகவில் இருந்த போது, டி.டி.வி.தினகரன் நடத்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகமாக செயல்பட்டது. எனவே வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் எதற்காக வந்தார். ஒரு நாள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அதன் பின்னணி உள்ள மர்மங்கள் என்ன என்பது குறித்து போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சுற்றுலாவுக்கு அந்தமான் சென்றிருந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா வீட்டில் புகுந்த மர்ம நபர் யார்? ஒருநாள் கழித்து புகார் அளிக்க காரணம் ஏன் என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.