இது குறித்து மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் போலீசார் வெங்கடராஜ் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெங்கடராஜ் ஜாமீனில் வந்துள்ளார். அதன்பின்பும் மாணவியை அவர் காதலிப்பதாக கூறியதோடு, அவரை திருமணம் செய்துகொண்டால் போக்சோ வழக்கு முடிந்துவிடும் என நம்பினார். மாணவி தற்போது பிளஸ்2 முடித்து வீட்டில் இருந்துவருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் வெங்கடராஜ், நண்பர் உபேந்திரனுடன் (24) முனிராஜின் வீட்டுக்கு சென்று அவரை எழுப்பி மகளை தனக்கு திருமணம் செய்து தரும்படியும் வழக்கை வாபஸ்பெறும்படியும் கூறியுள்ளார். மேலும் மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளார். முனிராஜ் தடுக்கவே இரும்பு ராடு மற்றும் கட்டையால் அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். பின்னர் வெங்கடராஜ் சிறுமியை கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து உபேந்திரனை கைது செய்தனர். தலைமறைவான வெங்கட்ராஜையும் மாணவியையும் தேடி வருகின்றனர்.
The post நள்ளிரவில் வீடு புகுந்து தந்தையை கொன்று மகளை கடத்திய வாலிபர்: சில்மிஷ தகராறில் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெறிச்செயல் appeared first on Dinakaran.