ஈஞ்சம்பாக்கம் தனியார் ஹோட்டல் அருகே மற்றும் எதிரே மாநகர பேருந்து நிற்பதில்லை எனவும் காலை மாலை என இரண்டு வேளைகளில் பிராட்வே, கோவளம் செல்வதற்கு மகளிருக்கான இலவச பேருந்து கூடுதலாக இரண்டு நடைகள் இயக்க வேண்டும் என வட்ட செயலாளர், கவுன்சிலர் விமலா கர்ணா கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து துறையின் மேலாண்மை இயக்குனரை அலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன். இன்று முதல் இங்கு பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி செல்லவும் பிராட்வே, கோவளத்துக்கு செல்ல காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக இரண்டு நடைகள் மகளிருக்கான இலவச பேருந்துகள் இயக்கப்படும். வருகிற 2025ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு ஈஞ்சம்பாக்கத்தில் மாநில அளவிலான படகு போட்டி நடைபெறும். முதல் பரிசு 5 லட்சம், 2ம் பரிசு 3 லட்சம், 3ம் பரிசு 2 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.நிகழ்ச்சியில் எஸ்.அரவிந்த ரமேஷ் எம்எல்ஏ, பகுதி செயலாளர் மதியழகன், பாலவாக்கம் சோமு, அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி; ஈஞ்சம்பாக்கத்தில் படகு போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.