நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 29 வரை விண்ணப்பம்

நாகர்கோவில், ஜூலை 25: தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, தனியார் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சமூக பாதுகாப்பு துறை, ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு, அவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விருது பெறும் ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம் ரொக்க பரிசும், ₹2500 மதிப்பிலான வெள்ளி பதக்கமும், பாராட்டு சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விபரங்களை எமிஸ் இணையதளம் மூலம் ஜூலை 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 25 முதல் 29 வரை பதிவேற்றம் செய்திட கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 29 வரை விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: