காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்


சென்னை: காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வரும் 11ம் தேதி மயிலாப்பூர் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என அறிவித்துள்ளனர்.

சென்னை நுண்ணறிவுப் பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் (09 நான்கு சக்கர வாகனங்கள். 01 மூன்று சக்கர வாகனம் (ஆட்டோ), 17 இரண்டு சக்கர வாகனங்கள்) மற்றும் பழுது நீக்கம் செய்யும் போது பெறப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகன உதிரி பாகங்கள் (spare parts scrap) எதிர்வரும் 11.07.2024 அன்று காலை 11.30 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், வரும் 11.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 11:15 மணிக்குள் முன் பணமாக ரூபாய். 1000/- செலுத் பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பணத் தொகை செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முழுவதையும் துறையின் வங்கி கணக்கில் (NEFT/RTGS mode) செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை நகல் (ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமம்), ஜி.எஸ்.டி. சான்று நகல் மற்றும் அங்கீகார கடிதம் (நிறுவனத்திற்காக கலந்து கொள்பவர்கள்) ஆகியவற்றை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.

The post காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: