திருமணமாகாத மகள்கள் என்பது உரிமை வயதடையாத குழந்தைகள் என மாற்றம்

தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கல் செய்த மசோதாவில், திருமணமாகாத ஆண்களுக்கு இணையாக திருமணமாகாத மகளிருக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குடும்பம் என்பதற்கான பொருள் வரையறையில் இருந்து ‘திருமணமாகாத மகள்கள்’ மற்றும் ‘திருமணமாகாத பேத்திகள்’ என்பது ‘உரிமை வயதடையாத குழந்தைகள்’, ‘உரிமை வயதடையாத பேரக்குழந்தைகள்’ என்று மாற்றம் செய்யப்பட்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதா நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

The post திருமணமாகாத மகள்கள் என்பது உரிமை வயதடையாத குழந்தைகள் என மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: