பேரவையில் முதல்வர் தகவல் புதிதாக 7 இடங்களில் தீயணைப்பு நிலையம்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய துறைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம், சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்காக 50 புதிய நீர்தாங்கி வண்டிகள் மொத்தம்ரூ.37.50 கோடியில் வழங்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக 3 நுரை தகர்வு நீர்தாங்கி ஊர்திகள்ரூ.2.40 கோடியில் வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் நிலைய அலுவலர்களின் பயன்பாட்டிற்கென புதிதாக 50 இருசக்கர வாகனங்கள்ரூ.55 லட்சத்தில் வழங்கப்படும். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1500 தற்காப்பு உடைகள்ரூ.11.25 கோடியில் வழங்கப்படும். மீட்புப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3000 மீட்பு உடைகள்ரூ.4.50 கோடியில் வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளின் போது பயன்படுத்துவதற்கு 453 மூச்சுக்கருவிகள்ரூ.6.34 கோடியில் வழங்கப்படும். வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்புப்பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையின் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

The post பேரவையில் முதல்வர் தகவல் புதிதாக 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: