மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

சிவகங்கை, ஜூன் 29:சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் இந்திய அரசின் சிறப்பு திட்டம் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வழக்கு பணியாளர் பணி தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

பிஎஸ்டபிள்யூ(சோசியல்) அல்லது எம்எஸ்டபிள்யூ (சோசியல்) படித்திருக்க வேண்டும். ஜூலை 1, 2024 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரியும், பணியில் அரசு அல்லது அரசு சாராத நிறுவனத்தில் ஆற்றுப்படுத்துதல் பணியில் ஒரு வருட அனுபவமுள்ளவராக இருத்தல் வேண்டும். இப்பணிக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த, சுழற்சி முறையில் தங்கி பணிபுரியக்கூடியவராக உள்ள தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாத தொகுப்பூதியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். ஜூலை 3, 2024 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: