3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு இன்று முதல் 8ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு குழு (ஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அமைப்பின் தலைவர் நந்தகுமார் அளித்த பேட்டி: மாற்றம் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 1 (இன்று) முதல் 8ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 1.5 லட்சம் வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

மேலும் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 2ம் தேதி வழக்கறிஞர்கள் சங்கம் முன் ஆர்ப்பாட்டமும், 3ம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும் நடைபெறும். 8ம் தேதி திருச்சியில் மாநில அளவிலான பேரணி நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

The post 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு இன்று முதல் 8ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: