ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மாஜி அமைச்சரை பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரவு பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கடந்த 25ம் தேதி கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள சிபிசிஐடி போலீசார் தரப்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் 2 தனிப்படை போலீசார் திண்டுக்கல் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும், ஒரு தனிப்படை போலீசார் கேரளாவுக்கும், 2 தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கும் விரைந்துள்ளனர்.

The post ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு மாஜி அமைச்சரை பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: