மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 7,412 பேர் புதிதாக பணி நியமனம்: அமைச்சர் தகவல்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘எம்ஆர்பியின் மூலம் இதுவரை 1,021 மருத்துவர்கள் உட்பட 3,036 பேர் பணி நியமனங்கள் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பணி நியமனம் செய்யப்படுகிற போதே கவுன்சிலிங்கும் செய்து, அவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணி ஆணைகளை வெளிப்படைத்தன்மையோடு தந்து கொண்டிருக்கிற ஆட்சியாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் இதுவரை 3,036 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. இன்னமும் நிரப்பப்படுவதற்கு தயாராக இருக்கிற பணியிடங்கள் 2,553 மருத்துவர்கள், 2,750 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள் 557 இதர பணியாளர்கள் என்று பல்வேறு வழக்குகளும் இருந்து கொண்டிருக்கிற நிலையில் அந்த வழக்குகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டு, மிக விரைவில் 7,412 பேர் இந்தத் துறைக்கு புதிதாக பணி நியனம் செய்யப்படவிருக்கிறது’’ என்றார்.

The post மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 7,412 பேர் புதிதாக பணி நியமனம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: