நீர்வளத்துறைக்கு புதிய இலச்சினை: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று, தமிழ்நாட்டில் நீர்வளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், நீர்ப்பாசனம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் மாநில நீர் பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டை நீர்மிகை மாநிலமாக மாற்றும் குறிக்கோளை உள்ளடக்கிய நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை (லோகோ) அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். நிகழ்ச்சியின்போது, நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறையின் சிறப்பு செயலர் முருகன், முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.

The post நீர்வளத்துறைக்கு புதிய இலச்சினை: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: