கிராமத்திற்குள் நுழைந்த 2 யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஜூன் 22: குடியாத்தம் வனப்பகுதி அருகில் உள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்ாதனா, வி.டி.பாளையம், கதிர்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் கிராமத்தில் 2 காட்டு யானைகள் பயங்கரமாக பிளிறியபடி விவசாய நிலத்திற்குள் நுழைந்தன. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும் மேளம் அடித்தும் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post கிராமத்திற்குள் நுழைந்த 2 யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: