அரியலூர் அரசு ஐடிஐ.ல் மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

 

அரியலூர். ஜூன் 22: அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்படியும், அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் அறிவுரையின்படியும், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று அரியலூர் அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிலும் 300க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது அரியலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், தொழிற்பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

The post அரியலூர் அரசு ஐடிஐ.ல் மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: