தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி, ஜூன் 22: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) அருண்நேரு தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுனர்களை தேர்வு செய்தனர். இதில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையோர் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

The post தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: