பெண் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர் கைது


சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் வாகன தணிக்கையின் போது, குடிபோதையில் வந்தவருக்கு ஆதரவாக, பெண் எஸ்ஐயை தொலைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் பெண் போலீஸ் ரஞ்சிதா ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை ரவுண்டானா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி வடுகப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன்(45) என்பவர் குடிபோதையில் டூவீலரில் வந்துள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் போலீசாரை மிரட்டியதுடன், சேந்தமங்கலம் அடுத்த காமராஜபுரத்தைச் சேர்ந்த பாஜ முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் செல்லமுத்துவை (61) போன் செய்து வரவழைத்தார். அவர் வந்து போலீசாரை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் எஸ்ஐ பிரியாவிடம், எனது ஆள் மீது வழக்கு போட்டால் உங்களை தொலைத்து விடுவேன் என செல்லமுத்து மிரட்டி உள்ளார். இதையடுத்து போலீசார் செல்லமுத்துவை கைது செய்தனர்.

The post பெண் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: