கள்ள சாராயம் எதிரொலியாக 30 லிட்டர் சாராயம் பறிமுதல்: 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது

திருத்தணி, ஜூன் 21:திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை பகுதிகளில் அமைந்துள்ள திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தமிழக எல்லையோர கிராமங்களில் ஆந்திர பகுதியிலிருந்து கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இறந்த சம்பவ பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக கிராமங்களில் போலீசார் ரோந்து தீவிரப்படுத்தி கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை எஸ்பிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் ஆர்கே பேட்டை கலால் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று திருத்தணி, ஆர்கே பேட்டை, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட ஆந்திர எல்லையோரம் தமிழக கிராமங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், நல்லாடூர் காலனி சேர்ந்த கன்னியம்மாள்(58), வினிதா(48), தமிழ் அழகன்(24), நெமிலி காலனி சேர்ந்த ரோஜா(27), நல்லாடூர காலனி சார்ந்த ஏகாத்தா(45) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் அருகே ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (47) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர்.

The post கள்ள சாராயம் எதிரொலியாக 30 லிட்டர் சாராயம் பறிமுதல்: 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: