விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனை விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் கொத்துகொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டதும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சின்னத்துரை என்பவர், மெத்தனால் கலந்த சாராயத்தை தன்னிடம் விற்றதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். சின்னதுரையும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, மெத்தனால் விற்றதாக கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருதால் சின்னதுரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாலாம் என கூறப்படுகிறது.

The post விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: