இளம்பெண்ணிடம் நகை, பணம் மோசடி; அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டிய விவசாயி மீது வழக்கு

சேலம்: தலைவாசல் அருகே பெண்ணிடம் நெருங்கி பழகி ₹14 லட்சம், 16 பவுன் மோசடி செய்ததோடு அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டிய விவசாயி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த 33 வயது இளம்பெண், சேலம் சரக டிஐஜியிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். நான் பிளவர் மில் நடத்தி வருகிறேன். எனது கணவரின் தந்தை பெயரில் செம்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்து அதில் கிடைத்த ₹19 லட்சத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். வெளிநபர்களிடம் வாங்கிய கடனான ₹4.50 லட்சத்தை கொடுத்துவிட்டு, மீதமுள்ள ₹14.50 லட்சமும் 16 பவுன் நகையும் என்னிடம் இருந்தது.

இந்நிலையில் எனது ஊரில் வந்து தங்கிய கடலூர் மாவட்டம் எல்லப்பன்பேட்டை குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ேஜாதி, அவரது மகன்கள் பிரகாஷ், பிரசாந் ஆகியோர் விவசாயம் செய்து வந்தனர். இவர்களில் பிரகாஷ் என்னிடம் ஆசைவார்த்தை கூறி பழகி, என்னிடம் இருந்த ₹14.50 லட்சம் பணம், 16 பவுன் நகை, வீட்டுப்பத்திரம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டார். மேலும் கூகுள் பே மூலமும் பணம் வாங்கி வந்தார். தற்போது பணம் நகையை கேட்டபோது, தன்னிடம் உள்ள செல்போனில் எடுத்து வைத்துள்ள உனது அந்தரங்க படங்களை வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என மிரட்டுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து போலீஸ் வீட்டிற்கு வந்தால் உன்னையும், குழந்தைகளையும் கொலை செய்துவிடுவேன் என கத்தியை காட்டி பிரகாஷ் மிரட்டினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக தலைவாசல் போலீசார் தந்தை, மகன்கள் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண்ணிடம் நகை, பணம் மோசடி; அந்தரங்க படங்களை வெளியிடுவதாக மிரட்டிய விவசாயி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: