கூடங்குளம் அருகே சிதம்பராபுரத்தில் ராபி பருவ பயிற்சி முகாம்

கூடங்குளம்,ஜூன்10: கூடங்குளம் அருகேயுள்ள சிதம்பராபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம் 2024-25ம் ஆண்டிற்கான ராபி பருவ கிராம முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி முகாம் ராதாபுரம் வேளாண் உதவி இயக்குநர் ஜாஸ்மின் லதா தலைமையில் நடைபெற்றது. ராதாபுரம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்றார். வேளாண் உதவி இயக்குநர் ஜாஸ்மின் லதா, விவசாயி வேளாண்மை துறை மூலமாக பல்வேறு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெறுவது பற்றி விரிவாக விளக்கினார். முன்னோடி இயற்கை விவசாயி சுந்தரம், விதைப்புக்கு முன் கடை பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கபடும் இடுபொருட்கள் எவ்வாறு செய்வது என்று விளக்கி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சரிகா, மண் மாதிரி எவ்வாறு எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வமணி, தோட்டக்கலை துறை திட்டங்கள் பற்றியும், மானிய விவரங்கள் பற்றி எடுத்து கூறினார். உதவி வேளாண் அலுவலர் நவீனா நன்றி கூறினார். இதில் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post கூடங்குளம் அருகே சிதம்பராபுரத்தில் ராபி பருவ பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: