வனவிலங்கு வேட்டையாட முயன்றவருக்கு அபராதம்

கடையம், ஜூன் 8: கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட குலுக்கை மொட்டை பகுதியில் கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றனர். அவரை மடக்கி பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் கடையம் பெரும்பத்து, பால்வண்ணநாதபுரம், மேலத் தெருவைச் சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் முத்துகிருஷ்ணன் (31) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசராணையில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின்படி ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post வனவிலங்கு வேட்டையாட முயன்றவருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: