போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்கு

சாத்தான்குளம், ஜூன் 7: சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பில் இடப்பிரச்னையில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 4ம் தேதி இவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து தட்டார்மடம் எஸ்ஐ பொன்னு முனியசாமி, காவலர் பாண்டித்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பினரும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்ஐ பொன்னு முனியசாமி அளித்த புகாரின்பேரில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீது தட்டார்மடம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அனிதா விசாரணை நடத்தி வருகிறார்.

The post போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: