மின் கம்பத்தால் விபத்து அபாயம்

மதுரை, ஜூன் 7 : மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ கள்ளந்திரி விவசாயம் நிறைந்த பகுதியாகும். வயல்வௌிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு மின்கம்பம் முறிந்து விழுந்தது. மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்ட நிலையில், இன்னும் மின் கம்பம் சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்வோர் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. தற்போது மாலை வேளையில் மழை பெய்யும் நிலையில், சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின் கம்பத்தால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: