அண்ணன் தம்பிக்குள் தகராறு : தட்டி கேட்டவருக்கு கல்லடி

வேடசந்தூர், ஜூன் 7: வேடசந்தூர் அருகே உள்ளது மூப்பனார் நகரில் தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக செல்வராஜ் (58) என்பவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது ஊரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் இளைஞர் ஒருவர் தனது தம்பியை தாக்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கே சென்ற செல்வராஜ், ‘‘ஏன் உன் தம்பியை அடிக்கிறாய் வேண்டாம்,’’எனத் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேடசந்தூர் எஸ்ஐ பாண்டியன் விசாரிக்கிறார்.

The post அண்ணன் தம்பிக்குள் தகராறு : தட்டி கேட்டவருக்கு கல்லடி appeared first on Dinakaran.

Related Stories: