நத்தத்தில் மளிகை கடை கதவை உடைத்து ரூ.1.75 லட்சம் திருட்டு

நத்தம், ஜூன் 6: நத்தத்தில் மளிகை கடை கதவை உடைத்து ரூ.1.75 லட்சம் பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சந்தனம்(55). இவர், நத்தம் – மதுரை சாலையில் வனச்சரக அலுவலகம் எதிரே மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்தனம் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை கடையை திறக்கவந்து பார்த்தபோது, கடை கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். அதில், மர்ம நபர்கள் இருவர் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நத்தத்தில் மளிகை கடை கதவை உடைத்து ரூ.1.75 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: