மாவட்டத்தில் லேசான மழை

ஈரோடு, டிச. 18: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வந்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு லேசாக பெய்ய தொடங்கி மழையானது நேற்று அதிகாலை வரை நீடித்தது. நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி மொத்தம் 35.60 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. ஈரோடு 1.80 மில்லிமீட்டர், கொடுமுடி 5, பெருந்துறை, பவானிசாகர் தலா 1, சென்னிமலை, எலந்தை குட்டைமேடு தலா 1.40 பவானி 3.40, கவுந்தப்பாடி 5.40, அம்மாபேட்டை 1.20, வரட்டுப்பள்ளம் அணை 2, கோபி 3.20, கொடிவேரி அணை 4.20, சத்தியமங்கலம் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

Related Stories: