ஈரோடு, டிச.18: ஈரோடு வ.உ.சி பார்க்கில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு பூசணிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை சுற்று கிராம பகுதிகளில் நாட்டு பூசணிக்காய் அதிகமாக பயிரிடப்பட்டு அறுவடை தொடங்கியுள்ளது. இதனால், ஈரோடு வ.உ.சி பார்க்கில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு பூசணிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இவற்றை கிலோ ரூ.20க்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக நாட்டு பூசணிக்காய் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது அறுவடை தொடங்கி உள்ளதால் ஈரோடு மார்க்கெட்டுக்கு நாட்டு பூசணிக்காய் வரத்து அதிகரித்துள்ளது.தைப்பொங்கல் வருவதால், அதன் விலை மேலும் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
