கண் சிகிச்சை முகாம்

பழநி, டிச. 18: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணை ஆணையர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் வரவேற்று பேசினார். மதுரை தனியார் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மாணவ- மாணவிகளுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், வெள்ளெழுத்து குறைபாடு உள்ளிட்டவை தொடர்பான நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

Related Stories: