கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார நடவடிக்கை

 

திருச்செங்கோடு, மே 25: திருச்செங்கோடு -ஈரோடு பிரதான சாலையில் உள்ள கூட்டப்பள்ளியில் அறிஞர் அண்ணா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதன் தென் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் கூட்டப்பள்ளி ஏரி உள்ளது. 33 வார்டுகளிலும் சேகரமாகும் மழைநீர் சாணார்பாளையத்தில் இருந்து கூட்டப்பள்ளிக்கு வரும். சுமார் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 20,21 வார்டுகளுக்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கும் நிலத்தடி நீராதாரமாக இந்த ஏரி விளங்குகிறது.

சுமார் 7 ஆண்டுக்கு முன்பு தன்னார்வ அமைப்பு மூலம் குப்பை கழிவுகளை அகற்றி தூர் வாரி ஏரியை ஆழப்படுத்தும் பணி நடந்தது. பொதுப்பணிதுறையின் கீழ் வரும் இந்த ஏரி நிரம்பினால் உபரி நீர் ஏமப்பள்ளி ஏரியை சென்றடையும். தொடர்மழையால் இந்த ஏரி மெதுவாக நிரம்பி வருகிறது.

ஆனால், தூர் வாராததால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பாசி படர்ந்து காணப்படுகிறது. கோரைப்புற்களும், கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. ஏரிக்கரையில் குப்பை கழிவுகளை குவித்து வருவதால் சுகாதார சீர்கேடு அபாயம் உருவாகியுள்ளது. எனவே, குப்பை கழிவுகளை அகற்றி, கரையை பலப்படுத்தி ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூட்டப்பள்ளி ஏரியை தூர்வார நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: