பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடும் விழா

 

பொன்னமராவதி, மே 21: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது. கண்டியாநத்தம் புதுப்பட்டியில் வருகிற 28ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக முகூர்த்தக்கால் நடுவிழா நடந்தது. இதில் ஆலவயல் விக்னேஸ் சுப்பிரமணிய சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓதி முகூர்த்தக்கால் விழாவை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதில் கண்டியாநத்தம் ரவீந்திரன், புதுப்பட்டி முத்து, அழகப்பன், மோகன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சேகர் ஊராட்சி வார்டு உறுப்பினர் சதீஷ்குமார், வழக்கறிஞர் பாண்டி, கருப்பையா,கண்ணுச்சாமி, முத்து, வெள்ளைச்சாமி, முருகேசன், அண்ணாச்சாமி, வேலுச்சாமி, தங்கவேல், அழகு, திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: