சிறப்பு பள்ளிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 19: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறப்புப்பள்ளிகளை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டபடி மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, மறுவாழ்வளித்தல் மற்றும் இதர செயல்பாட்டினை அளிப்பதே நிறுவனம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனத்தினை செயல்படுத்துவதற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டப்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகள் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை) சட்டப்படி அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறப்புப்பள்ளிகள் பதிவு மேற்கொள்ள சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறப்பு பள்ளிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: