திண்டுக்கல்லில் போதை இல்லாபாரதம் விழிப்புணர்வு

திண்டுக்கல், மே 19: திண்டுக்கல்லில் தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை சார்பில் போதை இல்லா பாரதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புஷ்பகலா தலைமை வகித்தார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், நன்னடத்தை அலுவலர்கள் ஜோதிமணி, சக்திவேல், மகளிர் திட்ட அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தனர். போதை இல்லா பாரதம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை சமூக நலத்துறை அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம், ஒருங்கிணைந்த பெண்கள் பாதுகாப்பு மையங்களில் ஒட்டி உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ரூபபாலன், பவித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post திண்டுக்கல்லில் போதை இல்லாபாரதம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: