புதுக்கடை அருகே மீனவர் திடீர் சாவு

புதுக்கடை, மே 19: புதுக்கடை அருகே முள்ளுர்துறை கடற்கரை கிராமம் 11ம் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி அடிமை (59). மீன்பிடித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் கரவலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்தோணி அடிமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அந்தோணி அடிமை மகள் சோபியா அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கடை அருகே மீனவர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: