காந்தி மியூசியத்தில் படிப்பிடை பயிற்சி

 

மதுரை, மே 18: மதுரை காந்தி மியூசியத்தில் ‘காந்தியடிகளின் பண்முக ஆளுமை’ எனும் தலைப்பில், இரு வார படிப்பிடைப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்து பேசுகையில், ‘‘இந்த படிப்பிடைப் பயிற்சியில் காந்திய அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் காந்தியடிகளின் பண்முக ஆளுமை குறித்து பேச உள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு யோகா, தியானம், சுய வேலை வாய்ப்பு, ஆளுமை திறன், காந்திய நூல்கள் வாசித்தல் ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார். விழாவல் அருங்காட்சியாக காப்பாட்சியர் நடராஜன் தொடக்க உரை ஆற்றினார். தொடர்ந்து காந்திய சிந்தனையாளர் டி.ஜவஹர்லால் ‘காந்தியடிகளின் வாழ்வியல்’ எனும் தலைப்பில் பேசினார். மதுரைக்கல்லூரி ஆங்கிலத்துறை முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் சரவணன் வரவேற்றார். மாணவி மோனிஷா நன்றி கூறினார். ஏற்பாடுகளை காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் செய்திருந்தார்.

 

The post காந்தி மியூசியத்தில் படிப்பிடை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: