டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவசர நியமனம் ஏன் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு அவசர கதியில் துணைவேந்தர் நியமனம்; ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அவசர கதியில் இயக்குநர் நியமனம். தேர்தல் நடத்தை விதிகளை மீறி புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு ஒன்றிய அரசு நேர்காணல் நடத்துகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் இந்துத்துவா கொள்கையை புகுத்தி இந்திய வரலாற்றை திருத்தி எழுத ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் அவசர கதியில் நியமிப்பது மோடியின் தோல்வி பயத்தை காட்டுகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் அத்துமீறிய நியமனங்கள் புதிய ஆட்சி அமைந்த பிறகு ரத்துசெய்யப்படும் எனவும் கூறினார்.
The post கல்வி நிறுவனங்களில் அவசர நியமனம்: சீத்தாராம் யெச்சூரி கேள்வி appeared first on Dinakaran.