பெங்களூரு : கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், சுகாதார சீர்கேடு அச்சுறுத்தல் காரணமாகவும் தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறினால் தொற்று நோய்களை பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
