அரியலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

அரியலூர் மே 12:அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், அட்சியதிருதியை முன்னிட்டு, 7ம் ஆண்டு விளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. 201 சுமங்கலி பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு, செல்வவளம் சிறக்கவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமண தடை நீங்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த குத்துவிளக்கில் தீபம் ஏற்றி அம்மன் துதி பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர். 108 மந்திரங்கள் ஒலிக்கப்பட்டபோது, விளக்கிற்கு பூத்தூவி சுமங்கலி பெண்களும் மந்திரங்களை உச்சரித்தனர்.பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post அரியலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: