பொய், வெறுப்பின் ஆதரவாளர்களை நிராகரியுங்கள்: வாக்காளர்களுக்கு சோனியா கோரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘‘நமது அரசியலமைப்பும், ஜனநாயகமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன. அவற்றை காப்பதில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி உறுதியுடன் உள்ளது. இளைஞர்களுக்கு வேலையின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தலித்துகள், பழங்குடியினர் , சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே பொய் மற்றும் வெறுப்பின் ஆதரவாளர்களை நிராகரியுங்கள்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் உத்தரவாதங்கள் நமது நாட்டை ஒன்றிணைத்து ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவின் பின்தங்கிய சமூகங்களுக்காக பணியாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஔிமயமான மற்றும் சமமான எதிர்காலத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். அனைவருக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வலுவான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

The post பொய், வெறுப்பின் ஆதரவாளர்களை நிராகரியுங்கள்: வாக்காளர்களுக்கு சோனியா கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: