தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த ₹3 லட்சம் பணத்தை தவறவிட்டவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர்

*போலீசார் பாராட்டு

திருமலை : தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த ரூ.3 லட்சம் பணத்தை தூய்மை பணியாளர் பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தார். இவரை போலீசார் பாராட்டினார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் சிண்டிகேட் வங்கி, தர்கா மிட்டா அருகே உள்ள பிரம்மானந்தபுரத்தைச் சேர்ந்த மகர சுனிதா. இவர் கணவன் இறந்த நிலையில் மினி பைபாஸில் உள்ள துணிக்
கடையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று தனது கடை அருகே தூய்மை பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தபோது ஒரு பை இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் ரூ.3 லட்சம் இருப்பதை பார்த்தார்.
இந்நிலையில் அனந்த சாகரம் மண்டலம் ரேவூர் சங்கரா நகர் பி.சி. காலனியைச் சேர்ந்த வேமுலா சீனைய்யா என்பவர் மினி பைபாஸில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது பொட்டு ஸ்ரீராமலு பூலே சிலை அருகே இறங்கிய பின் தன்னிடம் இருந்த பணப்பையை காணாமல் போனதை பார்த்து கவலையுடன் பாலாஜி நகர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார்.

அதற்குள் சுனிதா காவல் நிலையத்திற்கு போன் செய்து தான் தூய்மை பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தபோது பணப்பை சாலையில் கிடைத்ததாக கூறினார். பின்னர் போலீசார் சுனிதாவை மரியாதையுடன் பாலாஜி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பாலாஜி நகர் காவல்நிலைய போலீசார் முன்னிலையில், பணத்தை பறிகொடுத்த சீனைய்யாவிடம் கொடுத்தனர்.

கூலி பணி செய்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற சுழலிலும் பணம் நிறைய கிடைத்தாலும் மனிதநேயத்துடன் உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் போலீசில் ஒப்படைத்து பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க செய்தார். அங்கிருந்த போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் தூய்மை பணியாளர் சுனிதாவை பாராட்டினர்.

The post தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த ₹3 லட்சம் பணத்தை தவறவிட்டவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர் appeared first on Dinakaran.

Related Stories: